Also Watch
Read this
By: Manigandan Raja

சென்னை எழும்பூர் அடுத்துள்ள சேத்துப்பட்டில் உள்ள திடக்கழிவு மேலாண்மை நிலையத்தில், சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்போடு செயல்பட்டு வரும் பயோ-சிஎன்ஜி இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இப்பணியில் ஈடுபட்டு வரும் Shrinivas Waste Management Services Private Limited நிறுவனத்தின் செயல்பாடுகளை முதலமைச்சர் பார்வையிட்டார்.சென்னை மாநகராட்சியில் தினசரி சேகரிக்கப்படும் 180 டன் காய்கறிக் கழிவுகள் மற்றும் மாட்டுச்சாணத்தை பயன்படுத்தி, தினசரி 4,000 மெட்ரிக் டன் இயற்கை எரிவாயு தயாரிக்கப்பட்டு வருகிறது.
இயற்கை எரிவாயு நிலையத்திற்குள் சென்ற முதலமைச்சர் ஜோசப் விஜய், சுமார் 30 நிமிடங்கள் இயற்கை எரிவாயு தயாரிப்பு பணிகளைத் தீவிரமாக ஆய்வு செய்தார்.முதலமைச்சரைக் காண்பதற்காகப் பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்லாமல், பள்ளிச்சிறுவர் சிறுமிகள் தங்களின் சீருடையுடனே கூட்டத்திற்கு இடையே ஆர்வமுடன் காத்துக்கிடந்தனர்.

ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டுச் சாலையில் நடந்து வந்த முதலமைச்சர் ஜோசப் விஜய், சாலையின் இருபுறங்களிலும் திரண்டு இருந்த பொதுமக்களுக்குத் தனது கைகளை அசைத்தவாறு நடந்தபடியே சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved