news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வானிலை நிலவரம்
tv

Also Watch

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வானிலை நிலவரம்

சென்னை வானிலை மையம் தகவல்

81

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
r2

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வரும் நிலையில், வரும் 9ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து இன்று காலை 05:30 மணி அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது. இது, காலை 08:30 மணி அளவில், வடக்கு ஒடிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவுகிறது. அடுத்து, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை கடந்து செல்லக்கூடும்.

இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று 3ஆம் தேதி முதல் 9ம் தேதி வரை, தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பள்ளி அனுமதிக்காக லஞ்சம் வாங்கியதாக அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved