news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சிசிடிவி கேமரா முன்பு போதை ஆசாமியின் அட்டகாசம்!
tv

Also Watch

சிசிடிவி கேமரா முன்பு போதை ஆசாமியின் அட்டகாசம்!

திருவொற்றியூர்

1

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
chn 05

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே, சிசிடிவி கேமரா முன்பு ஒருவர் மதுபோதையில் நடனமாடியதுடன், அங்கு நின்றபடி உளறிக் கொண்டிருந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பரவி வருகின்றன. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா முன்பாகவே இந்த நபர் நீண்ட நேரம் அட்டகாசம் செய்ததாக கூறப்படுகிறது. “போதையில்லா தமிழகம்” என அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், பொதுஇடத்தில் மதுபோதையில் ஒருவர் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.

சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக கூறப்படும் இந்தக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பொதுஇடங்களில் ஒழுங்கை உறுதி செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்துவார்களா என்பதே தற்போது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அம்பத்தூரில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை.!

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved