news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஸ்கூட்டியில் வைத்திருந்த ஓய்வூதிய பணம் திருட்டு
tv

Also Watch

ஸ்கூட்டியில் வைத்திருந்த ஓய்வூதிய பணம் திருட்டு

பருத்தியூர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஓய்வூதிய பணம் திருட்டு

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவிற்கு உட்பட்ட பருத்தியூர் பகுதியை சேர்ந்தவர் பஞ்சமூர்த்தி. இவர் குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து தற்போது பணி ஓய்வு பெற்று அரசாங்கத்தின் மூலம் ஓய்வூதியம் பெற்று வருகிறார். ஒவ்வொரு மாதமும் தனது ஓய்வூதத்தை எடுப்பதற்காக குடவாசல் பகுதியில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் சென்று ஓய்வூதியத்தை எடுத்து வருவது வழக்கம்.

வழக்கம் போல பஞ்சமூர்த்தி தனது ஓய்வூத்தை எடுப்பதற்காக கடந்த 31/7/2026 அன்று தனது வீட்டில் இருந்து புறப்பட்டு குடவாசல் பகுதியில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் ஓய்வூதிய பணமான 25 ஆயிரத்து 500 ரூபாய் எடுத்துக் கொண்டு தனது ஸ்கூட்டியின் அடியில் வைத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பி உள்ளார்.

ஓய்வூதிய பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பும் பஞ்சமூர்த்தியை மர்பநபர்கள் நோட்டமிட்டுள்ளனர். பஞ்ச மூர்த்தி ஓய்வூதிய பணத்துடன் வீட்டுக்கு செல்லும் வழியில் பள்ளிவாசல்
எதிரில் உள்ள பெட்டிக்கடையில் வெற்றிலை பாக்கு வாங்குவதற்காக தனது ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு வெற்றிலை பாக்கு வாங்கும் சமயத்தில்.

இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஸ்கூட்டியில் இருந்த ஓய்வூதிய பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் பஞ்சமூர்த்திக்கு பின்னால் நின்று கொண்டு இருசக்கர வாகனத்தில் இருந்து பணத்தை எடுப்பது பஞ்சமூர்த்திக்கு தெரியாத வகையில் நின்று கொண்டனர்.

மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்களில் ஒருவர் பஞ்சமூர்த்தியின் ஸ்கூட்டியில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு மற்றொரு மர்ம நபர் ஓட்டி வந்த வண்டியில் ஏறிக்கொண்டு செல்கிறார் . இந்த காட்சிகள் அனைத்தும் அருகே உள்ள கடையில் உள்ள சிசிடிவி காட்சியில் தெளிவாக பதிவாகி உள்ளன.

இந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் மர்ம நபர்களின் புகைப்பட ஆதாரங்களுடன் குடவாசல் காவல் நிலையத்தில் பஞ்சமூர்த்தி கடந்த 02.08. 2026 அன்று புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பணத்தை மீட்டு தருகிறோம் எனக் கூறியுள்ளனர். சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் புகைப்படங்களுடன் புகார் அளித்தும் 15 நாட்கள் கடந்த பிறகும் காவல் துறையினர்
இதுவரை உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

மர்ம நபர்கள் பஞ்சமூர்த்தி ஸ்கூட்டியில் இருந்து பணத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
ஒரு மாதமாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யாததால் ஆத்திரம்

ஒரு மாதமாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யாததால் ஆத்திரம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாளை எந்தெந்த துறைகளுக்கு மானிய கோரிக்கை?

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved