Also Watch
Read this
By: Fyrose Banu

வார விடுமுறை தினமான இன்று கன்னியாகுமரி கடலில் திடீர் கடல் சீற்றம் மற்றும் கடலின் நீர்மட்டம் தாழ்வு காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலம் கருதி கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லும் சுற்றுலா படகுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பிற்கு கடல் இயல்பு நிலை திரும்பிய பின்பு மீண்டும் படகுகள் இயக்கப்படும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு சூரிய உதயம் மற்றும் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலை அதன் இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி நடை பலத்தை நேரில் கண்டு ரசிக்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். வார விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் முன்பு குவிந்தனர். சூறைக்காற்று வீசி வருவதால் கடல் சீற்றம் மற்றும் தாழ்வான நீர்மட்டம் காரணமாக படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில சுற்றுலா பயணிகள் படகு குளம் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி தற்காலிகமாக படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. சுற்றுலா பயணிகள் இதை கருத்தில் கொண்டு ஒத்துழைக்க வேண்டும் என்றும் மேலும் கடல் இயல்பு நிலை திரும்பிய பின்னர் படகு போக்குவரத்து தொடங்கப்படும் எனவும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் முன்பு குவிந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பிறகு சுற்றுலா பயணிகள் வெளியில் நின்றவாறு கடல் அழகை ரசித்து சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved