news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வேணுகோபாலன் சுவாமி ஆலய கும்பாபிஷேகம்
tv

Also Watch

வேணுகோபாலன் சுவாமி ஆலய கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை

2

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
myd

மயிலாடுதுறை அருகே சேத்திரபாலபுரம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வேணுகோபாலன் சுவாமி ஆலய கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சேத்திரபாலபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது இதனை முன்னிட்டு 3 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று பூர்ணாஹுதி செய்யப்பட்டு தீபாராதனை செய்யப்பட்ட பின் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை பட்டாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க கோவிலை சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தனர்.

தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனித நீரால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மூலவருக்கு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஸ்ரீ ஊர்மாரியம்மன் கோயில் மகாகும்பாபிஷேக விழா

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved