news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews களைகட்டிய மீன்பிடித் திருவிழா
tv

Also Watch

களைகட்டிய மீன்பிடித் திருவிழா

சிவகங்கை

3

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tpt 07

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கும்மங்குடி கிராமம் பெரியகண்மாயில் ஊத்தா மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான மீன் பிடியாளர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். சமூக வலைதளம் மூலம் இன்று ஊத்தா மீன் பிடி திருவிழா அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500 க்கும் மேற்பட்டோர் கையால் முடையப்பட்ட ஊத்தா மீன் பிடி கூடையுடன் மீன் பிடியாளர்கள் வருகை தந்து காத்து இருந்தனர்,

இந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க கிராமத்தினர் கிராம தெய்வத்திற்கு வழிபாடு செய்து கிராம பொது தேவை நிதிக்கு கட்டணம் வசூல் செய்த பின் மீன்பிடிக்க அனுமதி அளித்தனர். இதில் மீன் பிடிக்க அனுமதி கிடைத்ததும் மீன்பிடியாளர்கள் போட்டி போட்டு வேகமாக ஓடி சென்று கண்மாய்க்குள் இறங்கி மீன்களை பிடிக்க தொடங்கினர்.

இதில் கட்லா, ரோகு, சி.சி. ஜிலேபி கெண்டை, விரால் என வளர்ப்பு மற்றும் நாட்டு வகை மீன்கள் ஏராளமாக கிடைத்தன. மீன்பிடித்து விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சியுடன் சென்றனர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை சென்றவர்கள் வாகனங்களை நிறுத்தி மீன்பிடி திருவிழாவை கண்டு ரசித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சாம்பியன் பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved