news-tamil-logo

3/22/2026, 10:25:56 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews டபுள் எஞ்சின் ஏன் மணிப்பூரை காப்பாற்றவில்லை?
tv

Also Watch

tv

Read this

டபுள் எஞ்சின் ஏன் மணிப்பூரை காப்பாற்றவில்லை?

செங்கிப்பட்டி, தஞ்சாவூர்

Posted on: Jan 27, 2026 08:41 AM

18

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என கூச்சமே இல்லாமல், பிரதமர் மோடி அபாண்டமாக பொய் சொல்லி இருப்பதாக தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான் என்று அடித்து கூறினார்.

டெல்டா மண்டல திமுக மகளிரணி மாநாடு
தஞ்சையில் நடைபெற்ற வெல்லும் தமிழ்ப் பெண்கள் டெல்டா மண்டல திமுக மகளிரணி மாநாட்டில் பேசிய அவர், வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களை பிரதமரின் டபுள் எஞ்சின் ஏன் காப்பாற்றவில்லை? என வினவியுள்ளார். மேலும், நடைபெறவிருக்கும் தேர்தல் தமிழ்நாட்டிற்கும் என்.டி.ஏ. கூட்டணிக்குமான தேர்தல் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

வேலைக்கு செல்லும் பெண்கள் தமிழகத்தில் தான் அதிகம்
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் ’வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற தலைப்பில், டெல்டா மண்டல திமுக மகளிரணி மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என கூச்சமே இல்லாமல் பிரதமர் மோடி அபாண்டமாக பொய் சொல்லி சென்றிருப்பதாக கூறினார். இந்திய மாநிலங்களிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான் என அடித்துச் சொன்ன முதலமைச்சர், வேலைக்கு செல்லும் பெண்கள் தமிழகத்தில் தான் அதிகம் என்று கூறினார்.

மணிப்பூர் மக்களை காப்பாற்றவில்லை

மணிப்பூரை மறந்து விட்டீர்களா? என பிரதமருக்கு கேள்வி எழுப்பிய முதலமைச்சர், இத்தனைக்கும் மத்தியில் ஆள்வதும், மணிப்பூரை ஆண்டதும் இரண்டுமே பாஜக தான் என்றும், உங்கள் டபுள் இன்ஜின் ஓட்டுன, டப்பா இஞ்சின் ஏன் மணிப்பூர் மக்களை காப்பாற்றவில்லை என சரமாரியாக வினவினார்.

"மிரட்டல், உருட்டலால் உருவான பிளாக்மெயில் கூட்டணி"
தோற்ற கூட்டணியை புதுப்பித்து விட்டு பிரதமர் பில்டப் கொடுத்திருப்பதாக விமர்சனம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக - பாஜக கூட்டணி மிரட்டல், உருட்டலால் உருவான பிளாக்மெயில் கூட்டணி என்றும், அமித்ஷாவால் திணிக்கப்பட்ட கூட்டணி, இபிஎஸ்ஸால் உருவாக்கப்பட்ட சுயநல கூட்டணி எனவும் சரமாரியாக விமர்சனம் செய்தார்.

தமிழ்நாட்டிற்கும், என்.டி.ஏ. கூட்டணிக்கும் இடையிலான தேர்தல்
அதிமுக ஆட்சி என்ற பெயரில் பாஜக நடத்திய ப்ராக்ஸி ஆட்சி நடந்ததையே ஏற்காத மக்கள், தமிழ்நாட்டு மக்கள் என கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடக்கப் போகிற தேர்தல், தமிழ்நாட்டிற்கும், என்.டி.ஏ. கூட்டணிக்கும் இடையிலான தேர்தல் என்று தெரிவித்தார்.

குற்றவாளிகளுக்கு ஆதரவு கொடுத்த கட்சிதான் பாஜக - துணை முதலமைச்சர்
மாநாட்டில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தேர்தல் வரும் போதெல்லாம் பிரதமர் மோடி தமிழகம் வருவது வாடிக்கையான ஒன்று என்றும், அவர் மைக் என நினைத்து கண்ணாடியை பார்த்து பேசி இருப்பதாகவும் விமர்சனம் செய்தார். பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பட்டியலிட்டு பேசிய உதயநிதி, அந்த குற்றவாளிகளுக்கு ஆதரவு கொடுத்த கட்சி தான் பாஜக என குற்றம் சாட்டினார். 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதிச் சுமையை மாநிலத்தின் மீது திணிப்பதாக மத்திய பாஜக அரசு மீது புகார் தெரிவித்தவர், முரட்டு பக்தர் போல் முரட்டு அடிமையாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் இருப்பதாகவும் விமர்சனம் செய்தார்.

கனிமொழி எம்பி குற்றச்சாட்டு
திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி, பாஜக கூறி வரும் டபுள் இஞ்சின் எல்லாம், திராவிட எஞ்சினுக்கு முன்னால் காலாவதியான எஞ்சின் என்று விமர்சனம் செய்தார். டபுள் எஞ்சின் ஆட்சி உள்ள மாநிலங்களில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவில் நடப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

கலைஞரின் சிலை, வீரவாள் நினைவுப்பரிசு

மாநாட்டின் நிறைவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, திமுக மகளிரணி சார்பில் கலைஞரின் சிலை மற்றும் வீரவாள் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.

Related Link
விஜய் விமர்சனமும் அதிமுக, NDA தலைவர்களின் ரியாக்சனும்

விஜய் விமர்சனமும் அதிமுக, NDA தலைவர்களின் ரியாக்சனும்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

யூத் படத்தில் இடம் பெற்றுள்ள கானா பாடல்

0
3 mins agoshare
Gana dinesh








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved