Also Watch
Read this
By: Manigandan Raja

திருப்பூர் மாவட்டம் சுண்டமேடு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதி முறையாக இல்லை எனவும் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வரும் நிலையில் தங்கள்
பகுதியில் இருந்து பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வெளியே சென்று வர முறையான பேருந்து வசதி இல்லாததாகவும் இடும்பம் பாளையம் அரசு பள்ளிக்கு செல்லவும், திருப்பூரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வரவும் முறையான நேரத்தில் புதிய பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் கடும் சிரமம் அடைவதாகவும்.

5 கிலோமீட்டர் பயணித்து வேறு இடத்தில் இருந்து தான் பேருந்தில் ஏறிச் செல்ல முடிவதாகவும் இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் என அனைவரும் கடும் மன உளைச்சலுக்கு
உள்ளாவதாகவும் இதனை கருத்தில் கொண்டு தங்களது பகுதிக்கு பேருந்து போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .
இதனை தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved