news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோவில் நிர்வாகத்தின் கெடுபிடியால் இளைஞர் ஆத்திரம்
tv

Also Watch

கோவில் நிர்வாகத்தின் கெடுபிடியால் இளைஞர் ஆத்திரம்

தசரா திருவிழா

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன் பட்டினத்தில் உள்ள ஞானமூர்த்தீஸ்வரர் சமேத ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் நவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் இந்த தசரா திருவிழாவிற்கு பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் திரு காப்பு கட்டி அணிவது வழக்கம்.

கோவில் கடற்கரையில் ஊசி மணி பாசி, மாலை விற்பனை செய்பவர்கள் பக்தர்களுக்கு தேவையான மாலையை விற்பனை செய்து வருவார்கள். அதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்பே கோவில் கடற்கரையில் தங்கி விற்பனை செய்வது வழக்கம். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியைச் சேர்ந்த குட்டி(30). கடற்கரையில் மாலை விற்பனை செய்து வந்துள்ளார்.

இவரை கோவில் நிர்வாகம் கடற்கரையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து விற்பனை செய்யும்படி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குட்டி உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதனை அருகில் இருந்த உறவினர்கள் குடும்பத்தினர் தடுத்து அவரை சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர் அவருக்கு முதுகில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனை எடுத்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஊசி மணி பாசி விற்பனை செய்யும் குட்டி உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விவசாய நிலத்தில் நின்ற CM கார், சர்ப்ரைஸ் விசிட், கூலிங் கிளாஸ் கிஃப்ட்

23
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved