Also Watch
Read this
By: Manigandan Raja

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அதிரடி உத்தரவு
ரேபிடோ நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவாதமான பயணம், வாகனம் 5 நிமிடத்திற்குள் வராவிட்டால் 50 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம் என்பன போன்ற தவறான விளம்பரங்கள் மற்றும் 10 முதல் 30 ரூபாய் வரை கூடுதலாக தர வேண்டும் என்கிற அறிவிப்பு ஆகியவற்றை ஆணையம் கண்டறிந்தது.
பயங்கரவாதி மசூத் அசார் குறித்து தகவல் அளித்தால் பரிசு
ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 24 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்கிற பாகிஸ்தான் அரசின் அறிவிப்பு வெற்று நாடகம் என மத்திய அரசு விமர்சித்துள்ளது.

பாகிஸ்தான் இது போன்ற நாடகங்களையும், உலக நாடுகளை ஏமாற்றும் முயற்சிகளையும் ஏற்கெனவே பலமுறை செய்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ளது.
பீகாரில் அரசு பணியாளர் தேர்வர்கள் போராட்ட பேரணி
பீகாரில் அரசு பணியாளர் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டிய தேர்வர்கள், அதனை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வுகளை நடத்தக் கோரி பேரணி நடத்தினர். காந்தி திடலிலிருந்து பேரணியை தொடங்கி முதல்வர் இல்லத்தை நோக்கிச் சென்றவர்களை போலீஸார் ஜே.பி. கோலம்பரில் தடுத்து நிறுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved