Also Watch
Read this
Posted on: Jun 15, 2025 07:17 AM
By: Web Team

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் இந்திய அளவில் முதல் 100 இடங்களை பிடித்த மாணவர்கள் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு பேர் இடம் பிடித்திருப்பது எல்லையற்ற மகிழ்ச்சியளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
நீட் தேர்வினை எதிர்கொண்டவர்களுக்கும், தகுதி மதிப்பெண் பெற்றவர்களுக்கும், முதல் நூறு இடங்களுக்குள் இடம் பிடித்து சாதித்தவர்களுக்கும் பாராட்டு கூறியுள்ள அவர், தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் தலைசிறந்த மருத்துவர்களாக மக்கள் சேவையில் சிறந்து விளங்கவும், வெற்றியைத் தவறவிட்டவர்கள் மனம் தளராது மீண்டும் முயற்சிக்கவும் வாழ்த்தி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved