Also Watch
Read this
By: Web Team

பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான நிலைப்பாடு குறித்து, பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரஸ்பர நலனுக்காக உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் நெதன்யாகு விவாதித்தார். மேலும் காசா அமைதித் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவது குறித்தும் வலியுறுத்தியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved