Also Watch
Read this
By: Manigandan Raja

வதந்திகளைப் பரப்பி, கூட்டத்தைத் திரட்டியதே மோதலுக்கு காரணம்
மத்தியப்பிரதேசம் மாநிலம் உஜ்ஜைனில் மசூதி இடிக்கப்படுவது போல AI மூலம் வீடியோவை உருவாக்கி வதந்திகளைப் பரப்பி, கூட்டத்தைத் திரட்டியது மோதலுக்கு வழிவகுத்தாக போலீசார் தெரிவித்தனர்.
வதந்திகளைப் பரப்பி சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தியதற்காக, 3 காவல் நிலையங்களில் 20 பேர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 100-க்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்குகளை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்
உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் நண்பனைக் கழுத்தை நெரித்துக் கொன்றதாக கூறப்படும் சிறுவன் ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டான். கோரக்பூரின் சௌரி சௌரா பகுதியைச் சேர்ந்த சிறுவர்களான சிவா ராஜ்ஹர் மற்றும் சியாம் ராஜ்ஹர் ஆகிய இருவரும் உள்ளூர் குடிநீர் வாரிய வளாகத்திற்குள் ஒன்றாக உள்ளே செல்வதும்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து சியாம் மட்டும் தனியாகத் தனது ஆடைகளைத் துடைத்துக் கொண்டே வெளியேறுவதும் சிசிடிவியில் பதிவாகி உள்ளது. மறுநாள் சியாம் தண்டவாளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
பல ஆண்டுகளாக நிலவும் தண்ணீர் பற்றாக்குறை
மகாராஷ்டிராவின் சோலப்பூர் மாவட்டத்தில் உள்ள துல்ஷி ((Tulshi)) கிராமத்தில் பல ஆண்டுகளாக நிலவும் தண்ணீர் பற்றாக்குறையைக் கண்டித்து கிராமத்தை "விற்பனைக்கு" வைப்பதாக கூறி கிராம மக்கள் நூதனப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனனர்.

தண்ணீர் பற்றாக்குறையினால் விவசாயமும் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கிராமத்தில் உள்ள ஆண்களுக்கு பெண் கொடுக்க பக்கத்துக் கிராமத்தினர் மறுப்பதாகவும் கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved