Also Watch
Read this
Posted on: Nov 12, 2025 01:56 PM
By: Web Team

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட ஜமாத் இ இஸ்லாமி அமைப்புக்கு தொடர்புடையதாக கூறப்படும் 200 க்கும் அதிகமான இடங்களில் போலீசார்,ரெய்டு நடத்தினர்.
இந்த ரெய்டில் குற்றச் செயல்களுக்கு ஆதாரமான ஆவணங்களும், டிஜிட்டல் கருவிகளும் கைப்பற்றப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் போலீஸ் தெரிவித்துள்ளது. டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு மற்றும் அது தொடர்பாக மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டது.
அது மட்டுமின்றி கடந்த நான்கு நாட்களில் 500 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு அவர்களில் பலர் போலீசாரின் விசாரணை வளையத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ல் மத்திய அரசு ஜமாத் இ இஸ்லாமி அமைப்பை தடை செய்தது. அதை தொடர்ந்து அந்த அமைப்பின் முன்னணி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved