Also Watch
Read this
By: Manigandan Raja

அமைச்சர் பசவராஜ் ராயரெட்டி மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
கர்நாடக உயர்கல்வித்துறை அமைச்சர் பசவராஜ் ராயரெட்டி, இஸ்லாம் சிறந்த மதம் என்றும், அது அறிவியல் அடிப்படையிலான மதம் என்றும் பேசியதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமைச்சர் ராயரெட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையெனில் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தியுள்ளது.
முதுநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிவா?
ஜெய்ப்பூரில் முதுநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. வினாத்தாள் எதுவும் கசியவில்லை என்றும் மின்விநியோக கோளாறு காரணமாக தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்ட மையங்களில் செப்டம்பர் 5ந் தேதி தேர்தல் நடத்தவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கொய்னா எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகை
மகாராஷ்டிராவில் கர்ஜத் அருகே நடுவழியில் நின்ற கொய்னா எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென புகை கிளம்பியதால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. பிரேக் பழுதானதால் புகை வெளியேறியதாக கூறப்படுகிறது.

கரும்புகை சூழ்ந்ததால் அச்சமடைந்த பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். நடு வழியில் ரயில் நிறுத்தப்பட்டு, கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர் பயணம் தொடர்ந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved