news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ஹல்த்வானி சடங்கு கருத்து; ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு
tv

Also Watch

ஹல்த்வானி சடங்கு கருத்து; ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு

மதச் சடங்கு குறித்து கருத்து

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ராகுல் காந்தி

வால்மீகி சமூகத்தை சேர்ந்தவர் அளித்த புகாரில் நடவடிக்கை

ஹல்த்வானியில் நடைபெற்ற மதச் சடங்கு குறித்து கருத்து தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த அமித் குமார் அளித்த புகாரின் அடிப்படையில், பட்டியலின மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவு உள்பட பி.என்.எஸ். சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி நிர்வாகி குர்ப்ரீத் சிங் கோபி சுட்டுக்கொலை

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி குர்ப்ரீத் சிங் கோபி சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மம்தோட் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த அவரையும், உடன் சென்ற ஹர்ப்ரீத் சிங்கையும் காரில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் குர்பிரீத் சிங் கோபி உயிரிழந்தார். உடன் சென்ற ஹர்ப்ரீத் காயமடைந்தார்.

அவகோடா சாகுபடியில் விவசாயிகள் சாதனை

மனதின் குரல் நிகழ்ச்சியில், அவகோடா சாகுபடியில் சாதித்து வரும் விவசாயிகளை பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

குறிப்பாக, தமிழ கத்தின் கொடைக்கானலைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகரன் என்பவர், அரை ஹெக்டேர் நிலத்தில் அவகோடா பயிரிட்டு, நல்ல லாபம் ஈட்டி வருவதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், ஆந்திரா, கர்நாடக விவசாயிகளும் அவகோடா சாகுபடியில் கூடுதல் வருமானம் ஈட்டி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விவசாய நிலத்தில் நின்ற CM கார், சர்ப்ரைஸ் விசிட், கூலிங் கிளாஸ் கிஃப்ட்

23
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved