Also Watch
Read this
By: Web Team

டெல்லி மற்றும் அதை சுற்றி உள்ள தேசிய தலைநகர் பகுதிகளில் இடைவிடாது வெளுத்து வாங்கும் கனமழையால் அந்த பிரதேசம் முழுதும் நீரில் மிதக்கிறது.
டெல்லியில் யமுனை நதியை ஒட்டி இருக்கும் தாழ்வான பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
தொடர் கனமழை காரணமாக யமுனை நதி அபாய அளவான 205 புள்ளி 33 அடியை தாண்டி ஓடுகிறது. யமுனையின் தடுப்பணைகளில் இருந்து அதிக அளவு நீர் திறந்து விடப்படுவதால் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனமழையால் டெல்லிக்கு அருகே உள்ள குருகிராமில்20 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் அங்குள்ள பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved