அச்சுறுத்தலில் இருந்து முழுமையாக விடுவிக்க நடவடிக்கை
இந்தியாவை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து முழுமையாக விடுவிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வாக்கு திருட்டு - மத்திய அரசுக்கு ராகுல் சவால்
ஓட்டு திருட்டு பற்றி தொடர்ந்து பேசும் நிலையில், தன் மீது வழக்குப்போட தயாரா என மத்திய அரசுக்கு ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார். தன் மீது ஏற்கனவே 45 அவதூறு வழக்குகள் இருப்பதாகக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, மோடி அரசு தற்போது நடுங்குவது ஏன் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
எஸ்ஐஆர் - எதிர்க்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் புகார்
எஸ்.ஐ.ஆர் போராட்டங்களின் மூலம் நாட்டில் வன்முறையை தூண்ட எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ குற்றச்சாட்டியுள்ளார். வன்முறையை தூண்டி ஆட்சியை பிடிக்க இது ஒன்றும் வங்கதேசம் இல்லை என்றும் அவர் சாடியுள்ளார்.