Also Watch
Read this
By: Manigandan Raja

ஆம் ஆத்மி எம்.எல்.ஏவுக்கு முதலமைச்சர் ரேகா குப்தா அறிவுரை
மேல் சட்டை போடாமல் உள்ளாடை அணிந்த படி பெண்களிடம் மனுக்களை பெற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏவுக்கு முதலமைச்சர் ரேகா குப்தா கண்டனம் தெரிவித்ததுடன் அறிவுரையையும் வழங்கியுள்ளார்.
கிராரி தொகுதி எம்.எல்.ஏவான அனில் ஜா வட்ஸ், தனது வீட்டின் வெளியே பனியன் மற்றும் அரை டவுசர் அணிந்து நாற்காலியில் அமர்ந்தபடி பெண்களிடம் மனுக்களை பெற்ற வீடியோ வைரலானது. இதனை கண்டித்த முதலமைச்சர் ரேகா, எம்.எல்.ஏ அனில் ஜாவாட்ஸை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
அரசியல் கட்சிகள் போராடினா தடியடி இல்லை மாணவர்களுக்கு எதிராக மட்டும் ஏன் தடியடி?
அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தும்போது மேற்கொள்ளப்படாத கண்ணீர்ப்புகை வீச்சு மற்றும் தடியடி போன்ற நடவடிக்கைகள், ஏன் மாணவர்களுக்கு எதிராக மட்டும் நடத்தப்படுகின்றன என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் டிப்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
மகாராஷ்டிராவில் செய்தியாளருக்கு பேட்டி அளித்த அவர், மாணவர்கள் மீது இத்தகைய கொடுமைகளை இழைப்பதன் மூலம் என்ன பலன் கிடைக்கப்போகிறது என்பது குறித்து நாட்டின் அனைத்து அரசுகளும் சிந்திக்க வேண்டும் என்றார். மேலும் ஜார்க்கண்டில் உள்ள தங்கள் குழுவினர் மாணவர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் கூறினார்.
மூத்த ஐஏஎஸ் அதிகாரியான தீப்தி கவுர் புதிதாக நியமனம்
மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் உயர்கல்விச் செயலாளராக நியமிக்கப்பட்ட நரேஷ் பால் கங்வார், வெறும் 17 நாட்களில் அப்பதவியில் இருந்து மாற்றப்பட்டார்; அவருக்குப் பதிலாக மூத்த ஐஏஎஸ் அதிகாரியான தீப்தி கவுர் முகர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்யும் சூழல் ஏற்பட்டது. இதனால் மத்திய கல்வித்துறை அமைச்சகத்தில் அடுத்தடுத்து மாற்றம் நிகழ்ந்து வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved