news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இந்தியா சார்பில் நேபாளத்திற்கு நிவாரணப் பொருட்கள்
tv

Also Watch

இந்தியா சார்பில் நேபாளத்திற்கு நிவாரணப் பொருட்கள்

68 டன் அதிகமான நிவாரணப் பொருட்களை

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
India help nepal

4 விமானங்கள் மூலம் 68.5 டன் பொருட்கள் அனுப்பி வைப்பு

வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நேபாள நாட்டிற்கு இந்தியா 4 விமானங்கள் மூலம் 68 டன்னிற்கும் அதிகமான நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது. மேலும், மீட்பு மற்றும் தேடுதல் பணிகளுக்கு உதவ தொழில்நுட்ப குழுக்கள், தடயவியல் நிபுணர்கள், தேசிய மீட்புப் படையினர், இந்திய ராணுவத்தின் சிறப்புப் பிரிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்திய மீட்புக்குழு நேபாள ராணுவத்துடன் இணைந்து தேடுதல்

நேபாள பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீர்மின் திட்ட சுரங்கங்களில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து சென்ற சுரங்கப்பாதை மீட்புக் குழுவினர், நேபாள ராணுவத்துடன் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளத்தில் சுரங்கங்கள் சேதமடைந்த நிலையில், அவற்றுக்குள் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பதை கண்டறிய நவீன உபகரணங்களுடன் மீட்புக் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நேபாளத்தில் இருந்து இந்தியர்கள் 180 பேர் மீட்பு

பெருவெள்ளம் தாக்கிய நேபாளத்தில் இருந்து இந்தியர்கள் 180 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக நேபாளம் அரசு அறிவித்துள்ளது. மேலும் காணாமால் போனவர்களை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விவசாய நிலத்தில் நின்ற CM கார், சர்ப்ரைஸ் விசிட், கூலிங் கிளாஸ் கிஃப்ட்

23
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved