Also Watch
Read this
By: Manigandan Raja

RSS-ன் பேச்சுக்கும் செயல்பாட்டுக்கும் வேறுபாடு உள்ளது-ஓவைசி
முஸ்லிம்கள் இந்தியாவில் இருக்கக் கூடாது என நினைப்பவர் உண்மையான இந்து அல்ல என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகாவத் பேசிய கருத்தை, அசாதுதீன் ஓவைசி விமர்சனம் செய்துள்ளார்.
R.S.S. நிறுவனர் கே.பி. ஹெட்கேவரின் வாழ்க்கை வரலாற்றை மேற்கோள் காட்டி, ஆர்.எஸ்.எஸ்- ன் பொதுவெளி கருத்துகளுக்கும் அதன் தலைவர்களின் பழைய எழுத்துகளுக்கும் முரண்பாடு இருப்பதாக விமர்சித்துள்ளார்.
முதலமைச்சராக அகிலேஷுக்கு ஓவைசி ஆதரவு தேவை
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அகிலேஷ் யாதவுக்கு அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் ((AIMIM)) புதிய நிபந்தனையை முன்வைத்துள்ளது. அகிலேஷ் முதலமைச்சராக விரும்பினால், அசாதுதீன் ஓவைசியின் ஆதரவைப் பெற வேண்டும் என அதன் தலைவர் ஷதாப் சவுகான் தெரிவித்துள்ளார்.

மம்தா, அபிஷேக் பானர்ஜி மீதான FIR பதிவு குறித்து கருத்து
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து பேசிய முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, சட்டம் அனைவருக்கும் சமம் என்று தெரிவித்தார். சட்டத்தை மீறுபவர்கள் அல்லது சட்டத்தை கையில் எடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved