Also Watch
Read this
Posted on: Mar 15, 2026 12:39 PM
By: Manigandan Raja

பெண்கள் சபரிமலைக்கு செல்வது பற்றிய விவகாரம் :
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 50 வயதுக்கு குறைவான பெண்களை அனுமதிப்பது குறித்த தனது முந்தைய முடிவில் இருந்து கேரள அரசு பின்வாங்கி உள்ளது. 2018 ல் சபரிமலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த போது, 50 வயதுக்கு உட்பட்டவர்கள் சபரிமலைக்கு செல்ல கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவளிப்பதாக பினராயி விஜயன் அரசு அறிவித்தது.
அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், திடீரென தனது முடிவில் இருந்து கேரள அரசு பின்வாங்கி உள்ளது. விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளதால் வாக்காளர்களின் மத உணர்வுகளை மதிக்கும் வகையில் 50 வயதுக்கு உட்பட்டோர் சபரிமலைக்கு செல்லக் கூடாது என்ற முடிவு கேரள அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதை உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு சத்தியபிரமாணமாக தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved