Also Watch
Read this
By: Manigandan Raja

பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கி கெளரவிப்பு
உஸ்பெகிஸ்தான் நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் ஒலி தராஜாலி டஸ்ட்லிக்" விருதை பிரதமர் மோடிக்கு வழங்கினார். உஸ்பெகிஸ்தானின் உயரிய விருதைப் பெறுவதில் பெருமிதம் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் புத்தாக்கம், AI துறைகளில் இந்தியா அபார வளர்ச்சி
டிஜிட்டல் புத்தாக்கம், செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் ஆகிய துறைகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியடைவதாக உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கட் மிர்ஸியோயேவ் ((Shavkat Mirziyoyev)) பெருமிதம் தெரிவித்தார்.

இரு நாடுகளுகிடையே வர்த்தக, பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதற்கு, பிரத்யேகக் குழுக்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.
இந்திய வம்சாவளியினர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
கிர்கிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ‘மோடி வாழ்க’ என முழக்கமிட்டபடி, தேசியக் கொடிகளை ஏந்தி வரவேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சியில் இடம்பெற்ற யோகா மற்றும் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி கண்டு ரசித்தார். கலை நிகழ்ச்சிகளுக்கு கைதட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved