news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news முதலீட்டாளர் மாநாடு மூலம் 1,06,998 பேருக்கு வேலை
tv

Also Watch

முதலீட்டாளர் மாநாடு மூலம் 1,06,998 பேருக்கு வேலை

தமிழகத்தில் 55 புதிய திட்டங்கள் தொடங்க ஒப்பந்தம்

6

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனது. 67 ஆயிரத்து 452 கோடி ரூபாய் அளவுக்கு தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 4476 கோடி முதலீட்டிலான 8 புதிய திட்டங்களுக்கு, முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டினார். புதிய திட்டங்களால் 5074 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் 2676 கோடி ரூபாய் மதிப்பிலான 5 புதிய திட்டங்களை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். இந்த புதிய திட்டங்களால் தமிழகத்தில் 1550 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது.

வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு
வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.67,452 கோடிக்கு முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. இதன் மூலம் 1,06,998 வேலை வாய்ப்புகள் உருவாகும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன்...
சென்னை, கிண்டியில் 'வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு' முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
இந்த மாநாட்டில், முதலீடுகளை ஈர்ப்பது, தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
FROM VISION TO VICTORY எனும் பெயரிலான, 'வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள்' மாநாட்டை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

ரூ.1,000 கோடி
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முன்னிலையில், ஃபீனிக்ஸ் கோத்தாரி நிறுவனத்துடன் ரூ.1,000 கோடி முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. இதன் மூலம் ராமநாதபுரத்தில் 10,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என கூறப்படுகிறது.

மருந்து, ஆடைகள், காலணிகள், கார் என 97 விதமான தொழில்கள் தமிழகத்தில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலும் தொழிற்சாலை தொடங்க முதல் முறையாக ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னையில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ஒரு லட்சத்து 6,998 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது. 55 புதிய திட்டங்களை தொடங்கவும் ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனது.

பன்னாட்டு தொழிற்சாலைகள்
அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, தைவான், ஆஸ்திரேலியா, ரஷ்யா உள்ளிட்ட 8 நாடுகளின் நிறுவனங்கள் தொழில் தொடங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
பன்னாட்டு நிறுவனங்களில் தொழிற்சாலைகளை தமிழகத்தில் அமைக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான மாநாட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

V சின்ன கோட்டுடன் விஜய்
தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் ஜோசப் விஜயுடன் செல்பி எடுத்த தொழில் அதிபர்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக்கொள்ள வந்தவர்களும் ரசிகர்களாக மாறி படம் எடுத்துக் கொண்டனர்.
சென்னை தொழில் முதலீட்டாளர் மாநாட்டிற்கு வி சின்னம் பொறித்த கோட் அணிந்து வந்த முதலமைச்சர் விஜய், வெற்றி தொழில் முதலீட்டாளர் மாநாட்டின் ஆங்கில முதல் எழுத்தை குறிக்கும் குறியீட்டுடன் பங்கேற்றார்.

Related Link
தொகுதி மறு சீரமைப்பு எதிராக தீர்மானம், முதல்வர் விஜய் உரை

தொகுதி மறு சீரமைப்பு எதிராக தீர்மானம், முதல்வர் விஜய் உரை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

24 லட்சம் பெண் குழந்தைகளுக்கு உயர் கல்வி மறுப்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved