news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news டாஸ்மாக் ஊழியர்கள் 157 பேர் சஸ்பெண்ட்
tv

Also Watch

டாஸ்மாக் ஊழியர்கள் 157 பேர் சஸ்பெண்ட்

பாட்டிலுக்கு ரூ.10 - தீவிர நடவடிக்கை

17

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் மேலும் 157 பேர் பணியிடை நீக்கமென தகவல் வெளியாகி உள்ளது. பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

டாஸ்மாக் ஊழியர்கள்...
அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்ததாக, மேலும் 150 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். ’தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக பணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,’ என தெரிவிக்கப்பட்ட நிலையில் மொத்தம் 217 பணியாளர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும் 150 ஊழியர்கள்
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க லஞ்ச ஒழிப்புத் துறையும், டாஸ்மாக் நிர்வாகமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதில் நேற்று மட்டும் 67 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 150 பணியாளர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

217 பேர் சஸ்பெண்ட்
இதன் மூலம் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்துள்ளது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் ஆகிய மண்டலங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்ட பின் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.

பாட்டிலுக்கு ரூ.10 வசூல்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஊதிய உயர்வை சமீபத்தில் சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவித்தார். மேலும், டாஸ்மாக் கடை பராமரிப்பு உட்பட இதர செலவுகளுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் பணம் வழங்கும் என அமைச்சர் அறிவித்திருந்தார். ஊதிய உயர்வு அறிவித்த பின்னரும் பாட்டிலுக்கு ரூ.10 வசூலிப்பது தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த பின்பும் இது போன்ற நிகழ்வு நடைபெற்று வருவதால், பணியிடை நீக்கம் தொடர்கிறது.

Related Link
கூலிங் பீருக்கு 30 ரூபாய் எக்ஸ்ட்ரா...
போய் கலெக்டர்கிட்ட கேளு....

கூலிங் பீருக்கு 30 ரூபாய் எக்ஸ்ட்ரா... போய் கலெக்டர்கிட்ட கேளு....


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

‘சித்தா’ பட இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன்

21
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved