Also Watch
Read this
கயிலாய யாத்திரை முடித்துவிட்டு திரும்பிய ஈஷா ஃபவுண்டேஷனின் 77 வெளிநாட்டு பக்தர்கள், திபெத், நேபாள எல்லைப் பகுதியில் நிகழ்ந்த திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமாகியுள்ள நிலையில், அவர்கள் யாரும் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று ஈஷா ஃபவுண்டேஷன் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டிருக்கிறது. ஈஷா ஃபவுண்டேஷன் சார்பில் ஆண்டுதோறும் நடக்கும் கயிலாய யாத்திரையின் பின்னணி என்ன? சத்குரு என்ன சொல்கிறார்?

இயற்கை பேரழிவில்
ஈஷா ஃபவுண்டேஷன் சார்பில், ஆண்டுதோறும் Isha sacred walks என்ற பெயரில் கயிலாய யாத்திரை மிகப் பிரம்மாண்டமாக ஒருங்கிணைக்கப்படுகிறது. இந்த ஆன்மீக பயணத்தில் பங்கேற்க இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பதிவு செய்வார்கள். இந்த முறை ஒட்டுமொத்தமாக 21 தனித்தனி குழுக்களாக பக்தர்கள் கயிலாயத்திற்குப் சென்றனர். அப்படி சென்றவர்களில் பெரும்பாலானோர் யாத்திரையை வெற்றிகரமாக முடித்துவிட்டு திரும்பிய போதிலும் சில குழுக்கள் மட்டும் எதிர்பாராத இயற்கை பேரழிவில் சிக்கிக்கொண்டன.

அதிர வைக்கும் உண்மை
கயிலாய யாத்திரை முடித்துவிட்டு திரும்பிய ஈஷா குழுவினர், திபெத் - நேபாள எல்லையில் உள்ள கியிரோங் சீன அரசின் குடியேற்ற பிரிவு கட்டடத்திற்குள் நுழைந்தனர். அப்போது, ஏற்பட்ட பயங்கரமான வெள்ளப்பெருக்கில், கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பெரும்கட்டடமும், அங்கிருந்தவர்களும் அடித்து செல்லப்பட்டனர். இதில், ஈஷா அமைப்பை சேர்ந்த 77 வெளிநாட்டு பக்தர்கள் சுவடு தெரியாமல் மாயமாகினர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், ஈஷா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் உடைத்த உண்மைகள் அதிர வைக்கின்றன.

தகவல் தொடர்பு துண்டிப்பு
ஒட்டுமொத்த யாத்திரையில் 495 பக்தர்கள் ஏற்கனவே பத்திரமாக திரும்பி விட்டதாகவும், 743 பேர் திபெத்திலும், 148 பேர் நேபாளத்திலும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் புள்ளி விவரங்களுடன் விளக்கினார். ஆனால், கியிரோங் குடியேற்ற அலுவலகத்தில் இருந்த 77 பேர் மட்டும் எந்த தகவலுமின்றி மாயமாகி உள்ளதை அவர் வேதனையுடன் உறுதிப்படுத்தினார். பேரழிவிலிருந்து தன் பக்தர்கள் மாயமான தகவல் கிடைத்ததும், திபெத்தின் சாகா பகுதியில் முகாமிட்டிருந்த சத்குரு பதறிப்போய் உடனடியாக கிரவுண்ட் ஜீரோ எனப்படும் விபத்து நடந்த பகுதிக்கு செல்ல முயன்றார். ஆனால், சீனா, நேபாள எல்லை முழுவதுமே வெள்ளம், நிலச்சரிவு காரணமாக சாலைகளும், தகவல் தொடர்புகளும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருந்தன.

பரிதாப நிலையில்...
இந்த அதிபயங்கரமான சூழலில், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த இந்திய அரசு தரப்பிலிருந்து, சத்குருவை உடனடியாக விமானம் மூலம் அந்த பகுதியிலிருந்து வெளியேறுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆன்மீகப் பயணம் என்றாலே ஃபோட்டோ ஷூட், பைக் ரைடு, அட்வென்ச்சர்னு மிரள விடும் சத்குரு, ’என் மக்களே தண்ணில அடிச்சுட்டு போறாங்க, நான் மட்டும் விமானத்துல பறந்து போயிடவா, நான் இங்கேயேதான் இருப்பேன்,’ என்று பிடிவாதமாக நின்றாராம். ஆனால், ராணுவம் முழு பகுதியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாலும், சாலைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுவிட்டதாலும் அனுமதி மறுக்கப்பட்டது. கையில் கேமரா, உடம்பில் யோகா டிரஸோட பைக் ஓட்டி ஸ்டண்ட் பண்ண சத்குருவால், அங்கே என்ன செய்வதென்று தெரியாமல் கைகட்டி நிற்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார்.

உலகளவில் பேரதிர்ச்சி
இதனிடையே, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட 19 நாடுகளை சேர்ந்த 77 பக்தர்களின் குடும்பங்கள், தங்களது சொந்தங்களின் முகவரியை தேடி ரத்த கண்ணீரோடும், நெஞ்சை உலுக்கும் தவிப்போடும் காத்திருக்கும் சூழலில், ஈஷா ஃபவுண்டேஷன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், கியிரோங் பள்ளத்தாக்கு பகுதி முழுவதும் சுமார் 45 முதல் 50 அடி உயரத்திற்கு சகதியும், இடிபாடுகளும் தேங்கி கிடக்கின்றன. அங்குள்ள நிலவரத்தை பார்க்கும்போது, யாரும் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று பதிவு செய்துள்ளது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved