உத்தரபிரதேசம், சஹாரன்பூர்... தோட்டத்திற்குள் இருந்து வீசிய துர்நாற்றம். தலை துண்டாகி, நிர்வாண கோலத்தில் சடலமாக கிடந்த இளம்பெண். சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீஸ். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளியை பிடித்த போலீஸ். இளம்பெண் கொலை செய்யப்பட்டது ஏன்? கொடூர கொலையின் பின்னணி என்ன?டிசம்பர் 6ஆம் தேதி, யமுனா நகர்ல உள்ள ஒரு தோட்டத்துக்குள்ள இருந்து ஒரே துர்நாற்றமா வீசிருக்கு. ஏன் இப்படி நாற்றம் வீசுதுன்னு நினைச்ச பொதுமக்கள், அந்த தோட்டத்துக்குள்ள போய் பாத்துருக்காங்க. அப்ப தலை துண்டான நிலையிலையும், உடல் சிதைஞ்சு போன நிலையிலையும், ஒட்டு துணியில்லாம நிர்வாணமா இளம்பெண்ணோட சடலம் கிடந்துருக்கு.இந்த விஷயத்த கேள்விப்பட்டு, உடனே ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க. அடுத்து அங்க கிடந்த ஒரு ஹேண்ட் பேக்க எடுத்து அதுலஇருந்த கவர்ண்மென்ட் ஐடிய எடுத்து பாத்துருக்காங்க. அதுல தான் உயிரிழந்தது இளம்பெண் உமான்னு தெரியவந்துச்சு.அடுத்து இளம்பெண்ண கொலை செஞ்சது யாரு? எதனால இந்த கொலை நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்க போலீஸ் அங்கருந்த கிராம மக்கள் கிட்ட விசாரிச்சாங்க. அடுத்து, அந்த ஏரியா ஃபுல்லா தீவிர தேடுதல் வேட்டையிலேயும் இறங்குனாங்க. ஆனா, போலீஸ்க்கு எந்த ஒரு துப்பும் கிடைக்கல.கொலையாளி பக்கத்து மாநிலத்துக்கு தப்பிச்சு போய்ருப்பாருன்னு நினைச்ச போலீஸ், இந்த கொலை சம்பவத்த பத்தி இமாச்சலப் பிரதேசம், சண்டிகர், உத்தரகண்ட் மற்றும் உத்தரபிரதேசம் மாவட்ட போலீஸ்க்கும் தகவல் கொடுத்து, கொலையாளி பத்தி துப்பு கிடைச்சா சொல்ல சொல்லிருக்காங்க. ஆனா, அதுலையும் எந்த ஒரு தகவலும் போலீஸ்க்கு கிடைக்கல.அதுக்கப்புறம் அந்த ஏரியாவுல உள்ள சிசிடிவி காட்சிகள எடுத்து ஆய்வு பண்ணிருக்காங்க. அப்ப உயிரிழந்த பெண்ணும், இளைஞர் ஒருத்துரும் பைக்குல ஒன்னா சுத்துன காட்சி பதிவாகியிருந்துச்சு. இதனால கொலையாளி யாருன்னு தெரிஞ்சுக்கிட்ட போலீஸ் தலைமறைவா இருந் நபர வலைவீசி தேட ஆரம்பிச்சாங்க. அதுபடி சஹாரன்பூர் பகுதிய சேந்த பிலால் என்ற இளைஞரை பிடிச்சு விசாரிக்க ஆரம்பிச்சாங்க. உத்தரபிரதேசத்துல உள்ள சஹாரன்பூரைச் சேர்ந்த ஜானி-ங்குற நபரும் அதே பகுதிய சேந்த் உமாவும் 15 வருஷத்துக்கு முன்னாடி காதல் திருமணம் பண்ணிக்கிட்டாங்க.இந்த தம்பதிக்கு குழந்தை ஒன்னு இருக்கு. கல்யாணமான புதுசுல ஜானி மனைவி, குழந்தைன்னு சந்தோஷமா வாழ்ந்துட்டு இருந்தாரு. ஆனா நாள் போக போக இந்த தம்பதிக்குள்ள கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கு. சமீபத்துல இந்த ஜோடி பிரிஞ்சு தனித் தனியா வாழ ஆரம்பிச்சாங்க.இதுக்கிடையில உமாவுக்கும் அதே பகுதிய சேந்த டாக்சி ஓட்டுநரான பிலால்-ங்குற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கு. இந்த பழக்கம் நாளைடைவில் இவங்களுக்குள்ள தகாத உறவா மாறிருக்கு. அதுக்கப்புறம் ரெண்டு பேரும் லிவ்இன்ல வாழ ஆரம்பிச்சாங்க.ஆரம்பத்துல இவங்களோட வாழ்க்கை நல்லபடியா, சந்தோஷமா இருந்தாலும் அந்த சந்தோஷம் ரொம்ப நாள் நீடிக்கல. பிலாலுக்கு அவங்க வீட்ல வேற ஒரு பெண்ண பாத்துருக்காங்க. அதுக்கு பிலாலும் ஓகே சொல்ல, பிலாலுக்கும் அந்த பெண்ணுக்கும் சமீபத்துல நிச்சயமும் ஆகிருக்கு. கல்யாண தேதியும் ஃபிக்ஸ் ஆகிருக்கு. இந்த விஷயத்த கேள்விப்பட்டு, கொதிப்படைஞ்சு போன உமா, நான் உன்ன நம்பி தான வந்தேன், இப்ப நீ வீட்ல பாக்குற பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணனனா என்ன அர்த்தம்ன்னு கேட்டு சண்டை போட்ருக்காங்க. அதுக்கு பிலால், நான் உன்ன டைம்பாஸ்க்கு தான் லவ் பண்ணேன், நீ ஒழுங்கா உன்ன கணவன் கூடவே போய்ரு, என்னால லைப் ஃபுல்லா உன் கூட வாழ முடியாது, நீ உன் கணவன் கூட போய்ட்டு சந்தோஷமா வாழுன்னு சொல்லிருக்காரு.ஆனா, அத ஏற்க மறுத்த உமா, பிலால் கூட சண்டை போட்ருக்காங்க. இதனால ரெண்டு பேருக்கு இடையில பிரச்னை ஏற்பட்டிருக்கு. தன்னை திருமணம் பண்ணிக்க சொல்லி உமா தொடர்ந்து பிலால டார்ச்சர் பண்ணிட்டும் இருந்துருக்காங்க.இதனால கடும் கோபமான பிலால், உமா உயிரோட இருந்தா லிவ்இன் உறவ வெளியில சொல்லி நம்மள அசிக்கப்படுத்திருவான்னு பயந்துருக்காரு. அதே மாதிரி உமாவ உயிரோட விட்டு வச்சா நம்ம நிம்மதியா வாழ முடியாதுன்னு நினைச்சு, அவங்கள கொலை செய்ய திட்டம் போட்ருக்காரு.சம்பவத்தன்னைக்கு உமாவ கூப்டு ஊர் சுத்தப்போன பிலால், அங்குள்ள ஒரு காட்டுப்பகுதியில வச்சு அவங்க கிட்ட சண்டை போட்ருக்கான். அப்ப திடீர்ன்னு உமாவோட கழுத்த நெரிச்சுருக்கான். மறைச்சு வச்சுருந்த கத்திய எடுத்தும், உமாவோட உடல்ல சரமாரியா குத்திருக்கான்.இதுல சம்பவ இடத்துலையே சுருண்டு விழுந்த உமா உயிரிழந்துட்டாங்க. அப்பவும் ஆத்திரம் தீராத பிலால் உமாவோட கழுத்த கரகரன்னு அறுத்து துண்டா எடுத்துருக்கான். அதுக்கடுத்து உமாவோட துணியெல்லாத்தையும் கழட்டி, உடல சிதைச்ச பிலால், சடலத்த நிர்வாண கோலத்துல அங்கையே போட்டுட்டு போய்ட்டான். இந்த விஷயத்த கேள்விப்பட்டு, ஸ்பாட்டுக்கு போன போலீஸ் சிசிடிவி காட்சிகள ஆய்வு பண்ணி, தலைமறைவா இருந்த பிலால அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க.