Also Watch
Read this
By: Manigandan Raja

திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை இன்று காலை முதல் வெகுவாக அதிகரிக்க துவங்கி இலவச தரிசனத்திற்காக சுமார் மூன்று கிலோ மீட்டர் நீளம் கொண்ட வரிசையில் 24 மணி நேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
அதிகளவிலான பக்தர்கள் திருப்பதி மலைக்கு வரும் காரணத்தால் மலையடிவாரத்தில் உள்ள சோதனை சாவடியின் முன் சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு ஆயிரக்கணக்கான கார்கள் தணிக்கைக்காக காத்திருக்கின்றன.
பக்தர்கள் வருகை அதிகரித்த காரணத்தால் திருப்பதி மலையில் அறைகள் தட்டுப்பாடு தீவிரநிலையை அடைந்துள்ளது.
நேரடி இலவச தரிசனத்திற்காக திருப்பதி மலைக்கு வந்திருக்கும் பக்தர்கள் 24 மணி நேரமும், இலவச தரிசன டோக்கன் வாங்கி வந்திருக்கும் பக்தர்கள் ஆறு மணி நேரமும், 300 ரூபாய் தரிசன டிக்கெட் வாங்கி வந்திருக்கும் பக்தர்கள் சுமார் 3 மணி நேரமும் காத்திருந்து ஏழுமலையானை வழிபட்டு செல்கின்றனர்.
சாமி கும்பிடுவதற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்து வருகிறது. 87 ஆயிரத்து 658 பக்தர்கள் சாமி கும்பிட்ட நிலையில் அவர்களில் 40
ஆயிரத்து 600 பேர் மொட்டை போட்டு தலைமுடி சமர்ப்பித்தனர்.
கோவில் உண்டியலில் நேற்று 4 கோடியே 13 லட்சம் ரூபாயை பக்தர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்ப்பித்தனர் ஒரே நாளில் நான்கு லட்சத்தி 15 ஆயிரம் லட்டுக்கள் திருப்பதி மலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved