திருப்பதி மலையில் உள்ள லட்டு விநியோக வளாகத்தில் உள்ள 47ம் எண் கவுண்டரில் கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. லட்டு விநியோக கவுண்டரில் இருந்து கரும்புகை வெளி வருவதை பார்த்த பக்தர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து தேவஸ்தான ஊழியர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.