news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news நேபாள பெரு வெள்ளத்தில் தப்பிய பச்சை நிற வீடு
tv

Also Watch

நேபாள பெரு வெள்ளத்தில் தப்பிய பச்சை நிற வீடு

உயிர் பிழைத்ததை மறுவாழ்வு என்ற உரிமையாளர்

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நேபாள பெரு வெள்ளத்தில் தப்பிய பச்சை நிற வீடு

நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் பச்சை நிற வீடு தப்பிய நிலையில், வீட்டின் உரிமையாளர் உயிர் பிழைத்ததை மறுவாழ்வு என்று கூறியுள்ளார். அந்த வீட்டின் உரிமையாளரான லட்சுமி பாண்டே, பயங்கரமான தருணங்களை அச்சத்துடன் விவரித்தார்.

பச்சை நிற வீட்டில் தப்பிய குடும்பத்தினர்
வெள்ள நீர் வீட்டின் முதல் தளத்திற்குள் புகுந்ததால், லட்சுமி பாண்டே, அவரது கணவர் பிரகாஷ் மற்றும் குடும்பத்தினர் உட்பட 6 பேர் மேல் தளத்திற்கு தப்பிச் சென்றனர். சுற்றியுள்ள வீடுகள் இடிந்து விழுவதைக் கண்டு மரண அச்சத்தில் இருந்த தங்களை, அண்டை வீட்டார்தான் மிகவும் தைரியமாக மீட்டுப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றதாகக் கூறியுள்ளார். இதனால், தாங்கள் உயிர் பிழைத்ததை தங்களுக்குக் கிடைத்த ஒரு "மறுவாழ்வு, இரண்டாவது பிறவி" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இறை வழிபாடு
வெள்ளத்தின் வேகத்தால் வீடே பயங்கரமாகக் குலுங்கிய அந்த இக்கட்டான தருணத்தில், இனி உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்றே அவர்கள் நினைத்துள்ளனர். அந்த நேரத்தில் லட்சுமி பாண்டே, தொடர்ந்து "ஓம் நமசிவாய" மந்திரத்தை உச்சரித்துக் கொண்டும், 'ஹனுமான் சாலிசா' படித்துக் கொண்டும் இறைவனை வேண்டியதாக தெரிவித்துள்ளார்.

நில நடுக்கத்தின் போது...
கடந்த 2015ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட மிக மோசமான நில நடுக்கத்தின் போதும் கூட, சுற்றியுள்ள பல கட்டடங்கள் இடிந்த போதும் இந்த பச்சை நிற வீடு எந்தப் பாதிப்பும் இன்றி தப்பியது, நினைவுகூரத்தக்கது.

Related Link
நேபாளத்தை உலுக்கிய வெள்ளத்திலும் 40 வருட பச்சை வீடு தப்பியது எப்படி?

நேபாளத்தை உலுக்கிய வெள்ளத்திலும் 40 வருட பச்சை வீடு தப்பியது எப்படி?

           

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாள பெரு வெள்ளத்தில் தப்பிய பச்சை நிற வீடு

7
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved