news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news "அலர்ட் சிஸ்டம் இருந்திருந்தால் நூற்றுக் கணக்கானோரை காப்பாற்றியிருக்கலாம்"
tv

Also Watch

"அலர்ட் சிஸ்டம் இருந்திருந்தால் நூற்றுக் கணக்கானோரை காப்பாற்றியிருக்கலாம்"

நேபாள வெள்ளம் உணர்த்துவது என்ன?

1

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போட்டேகோசி–திரிசூலி பள்ளத்தாக்கை ஆகஸ்ட் 26ஆம் தேதி அன்று தாக்கிய திடீர் வெள்ளம், நமது தலைமுறையில் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட மிகக் கொடிய பேரிடராக மாறியுள்ளது.

கணிசமாக குறைத்திருக்கலாம்...
இமயமலையில், பனிப்பாறை சரிவுகளையும் பனிப்பாறை ஏரி வெடிப்புகளையும் முழுமையாகத் தடுக்க முடியாது. ஆனால், அவை ஏற்படுத்தும் உயிரிழப்புகளையும் பொருளாதாரச் சேதங்களையும் கணிசமாகக் குறைக்க முடியும். அதற்கான முதல் தேவை, ஆபத்தை முன்கூட்டியே கண்டறிதல். இரண்டாவது, தகவலை உடனடியாகப் பகிர்தல். மூன்றாவது, எச்சரிக்கை கிடைத்தவுடன் மக்கள் எங்கு செல்ல வேண்டும் என்பது குறித்து முன்கூட்டியே திட்டமிடுதல்.

பெருவெள்ளம் ஏற்படுத்திய மிகப்பெரிய சேதம்
நேபாளத்தின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDRRMA) வெளியிட்ட தகவல்களின்படி, நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களில் 33 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களில் கணிசமான எண்ணிக்கையிலானவர்கள் இந்தியர்கள். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. வெள்ளத்தின் தாக்கம் மனித உயிரிழப்புகளுடன் நின்றுவிடவில்லை. ஆற்றங்கரையோர குடியிருப்புகள் பல அழிக்கப்பட்டுள்ளன. 15 நீர்மின் நிலையங்கள் சேதமடைந்துள்ளன. 35 பாலங்கள், 45 தொங்கு பாலங்கள், சுமார் 40 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைப் பகுதிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கை அமைப்புகள் எங்கே?
இந்து குஷ் இமயமலை (HKH) என்பது ஆசியாவில் 3,500 கிலோமீட்டர் நீளத்திற்குப் பரந்து விரிந்துள்ள ஒரு பிரம்மாண்டமான மலைத்தொடராகும். இது ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், சீனா, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய 8 நாடுகளில் பரவியுள்ளதுடன், சுமார் 200 கோடி மக்களுக்குத் தேவையான நன்னீரையும் வழங்குகிறது. இதில் புகழ்பெற்ற இந்து குஷ், காரகோரம் மற்றும் இமயமலைத் தொடர்கள் அடங்கியுள்ளன. வட மற்றும் தென் துருவங்களுக்கு வெளியே, உலகின் மிக அதிகமான பனி மற்றும் பனிப்பாறைகளைக் கொண்டுள்ளதால் இப்பகுதி மூன்றாவது துருவம் என்று அழைக்கப்படுகிறது.

நீர் கோபுரம்...
சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட பத்து முக்கிய நதிகள் இங்கிருந்தே உற்பத்தியாகின்றன. எனவே, இப்பகுதி ஆசியாவின் நீர் கோபுரம் (Water Tower of Asia) என அழைக்கப்படுகிறது. ஆனால், இந்தப் பகுதி உலக சராசரியைவிட வேகமாக வெப்பமடைந்து வருகிறது. குறிப்பாக உயரமான பகுதிகளில் ஏற்படும் வெப்பநிலை உயர்வு, பனிப்பாறைகள் சுருங்குதல், நிரந்தர உறைபனி உருகுதல், புதிய பனிப்பாறை ஏரிகள் உருவாகுதல் மற்றும் பனிப்பாறை சரிவுகள் போன்ற மாற்றங்களை வேகப்படுத்துகிறது. இமயமலை முழுவதும் 200க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள், கீழ்நோக்கி வசிக்கும் மக்களுக்கு ‘மிகவும் அதிக ஆபத்தானவை’ என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் கீழ்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு வெள்ளம் வருவதற்கு முன்பு கிடைக்கும் எச்சரிக்கை நேரம் வெறும் 5 முதல் 30 நிமிடங்களாக இருக்கக்கூடும்.

ஒத்துழைப்பு இல்லை
இவ்வளவு குறுகிய காலத்திற்குள் ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவது, automated detection and alert systems இல்லாமல் சாத்தியமில்லை. செயற்கைக்கோள் கண்காணிப்பு, தானியங்கி சென்சார்கள், AI அடிப்படையிலான அபாயக் கணிப்பு, சைரன்கள் மற்றும் மொபைல் எச்சரிக்கைகள் போன்ற தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்தால், குறுகிய எச்சரிக்கை நேரத்தைக் கூட உயிர்காக்கும் வாய்ப்பாக மாற்ற முடியும். இதற்கு நேபாளம் மற்றும் சீனா இடையே மட்டுமல்லாது இமயமலையைச் சுற்றி அமைந்துள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே நிகழ்நேர தரவுப் பகிர்வு, செயற்கைக்கோள் தகவல் பரிமாற்றம், கூட்டு கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த அவசர எச்சரிக்கை நடைமுறைகள் தேவை. ஆனால் இந்த ஒத்துழைப்பு இன்னும் போதுமான அளவில் இல்லை என்பதையே நேபாள பேரிடர் சுட்டிக்காட்டுகிறது.

தொழில்நுட்பம் இருக்கிறது; ஆனால் கண்காணிப்பு போதவில்லை
தொலை உணர்வு கருவிகள், தானியங்கி சென்சார்கள், கேமராக்கள் மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தும் முன்னெச்சரிக்கை அமைப்புகள் நேபாளம், பூடான், பாகிஸ்தான் மற்றும் சீனாவின் சில பகுதிகளில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இத்தகைய முன்னெச்சரிக்கை அமைப்புகள் பரவலாக இல்லை. 5,000 மீட்டர் உயரத்திற்கு மேல் சென்று சென்சார்களை நிறுவுவதும், அவற்றைப் பராமரிப்பதும் மிகுந்த சவாலான பணியாகும்.

மிக முக்கியமான கேள்வி
கடுமையான வானிலை, பனிப்பொழிவு, கடினமான நிலப்பரப்பு மற்றும் போக்குவரத்து வசதியின்மை ஆகியவை பராமரிப்புச் செலவையும் சிரமத்தையும் அதிகரிக்கின்றன. மேலும், ஆண்டின் சில குறுகிய கோடைகாலங்களில் மட்டுமே இத்தகைய பகுதிகளுக்குச் சென்று பணிகளை மேற்கொள்ள முடிகிறது. இதனால் செயற்கைக்கோள் கண்காணிப்பு, தொலை உணர் தொழில்நுட்பம் மற்றும் தானியங்கி எச்சரிக்கை அமைப்புகளை ஒருங்கிணைத்து பயன்படுத்துவது எதிர்காலத்தில் முக்கியமானதாகிறது. “அடுத்த வெள்ளம் எப்போது வரும்?” என்பது மட்டுமல்ல. “அது வரும் முன் அதை நாம் கண்டறிந்து, மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்க முடியுமா?” என்பதே நேபாளத்தின் ஆகஸ்ட் 26 பேரிடர் எழுப்பும் மிக முக்கியமான கேள்வி.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விவசாய நிலத்தில் நின்ற CM கார், சர்ப்ரைஸ் விசிட், கூலிங் கிளாஸ் கிஃப்ட்

23
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved