news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news திருச்சியில் நன்றி தெரிவித்து முதல்வர் ஜோசப் விஜய் உரை
tv

Also Watch

tv

Read this

திருச்சியில் நன்றி தெரிவித்து முதல்வர் ஜோசப் விஜய் உரை

திருச்சி

44

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருச்சியில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜோசப் விஜய் உரையாற்றினார்.

திருச்சியில் முதல்வர் விஜய்
வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறுவதற்காக, முதல்வர் விஜய் திருச்சிக்கு வந்து சேர்ந்தார். தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு கட்சியினர், கூடியிருந்து பொது மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

முதலமைச்சரை வரவேற்ற ஆதவ்
வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக திருச்சி வந்துள்ள முதல்வர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வரவேற்றார்.

முதல்வரை வரவேற்ற துரை வைகோ

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக திருச்சிக்கு வந்த முதல்வர் விஜயை சால்வை அணிவித்து மதிமுக எம்பி துரை வைகோ வரவேற்றார்.

10 கி.மீ. வரை பயணம்
திருச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு காவல் துறையினர் மரியாதை அளித்தனர். தொடர்ந்து பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக திருச்சி விமான நிலையம் வந்தடைந்த முதல்வர் விஜய், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு 10 கிலோ மீட்டர் தூரம் வரை பொதுமக்களை சந்தித்தபடி வாகனத்தில் பயணம் மேற்கொண்டார்.

வழிநெடுக உற்சாக வரவேற்பு
திருச்சி விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு செல்லும் முதல்வா் விஜய்க்கு வழிநெடுக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வழிநெடுகிலும் இருபுறமும் காத்திருந்த தொண்டா்களும் பெண்களும் முதல்வா் விஜய்க்கு ஆரவார வரவேற்பு அளித்தனர்.

பொதுக்கூட்டத்தில் உரை 

இதனை தொடர்ந்து பொதுக்கூட்ட மேடையில், வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து, முதல்வர் விஜய் உரையாற்றினார். 


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து 2-வது ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி...

0
2 hrs 43 mins agoshare
rcb 2026 winner








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved