news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news 110 விதியின் கீழ் 5 அறிவிப்புகளை வெளிட்ட முதலமைச்சர் விஜய்
tv

Also Watch

110 விதியின் கீழ் 5 அறிவிப்புகளை வெளிட்ட முதலமைச்சர் விஜய்

ரூ.33,066 கோடியில் புதிய மின் திட்டம்

1

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பால் கொள்முதல் விலையை 44 ரூபாயாக உயர்த்துதல் உள்ளிட்ட 5 அறிவிப்புகளை 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில்...
காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலத்தில் 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செமிகண்டக்டர் மற்றும் எலக்ட்ரானிக் உற்பத்தி பூங்கா, கோயம்புத்தூரில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டிஜிட்டல் நிதி மையம், திருச்சி மண்டலத்தில் பல்முனை சரக்கு போக்குவரத்து மையம் ஆகியவை அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்து உள்ளார்.

ரூ.1,762 கோடி மதிப்பீட்டில் மின் பகிர்மான கட்டமைப்பு மேம்பாடு
33 ஆயிரத்து 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின் தொடரமைப்பு மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதன் மூலம் 196 புதிய துணை மின் நிலையங்கள், 15 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுடைய புதிய மின் பாதைகள் அமைக்கவும், ஏற்கனவே உள்ள மின்பாதைகளை வலுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஆயிரத்து 762 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின் பகிர்மான கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு 36 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விவசாய நிலத்தில் நின்ற CM கார், சர்ப்ரைஸ் விசிட், கூலிங் கிளாஸ் கிஃப்ட்

23
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved