Also Watch
Read this
By: Fyrose Banu

இயக்குநராக பல வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி இடத்தை பிடித்த லோகேஷ் கனகராஜ், தற்போது ஹீரோவாகவும் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் நடிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள ‘டிசி’ திரைப்படம் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தேவதாஸாக லோகேஷ்!
படத்தில் லோகேஷ் கனகராஜ் ‘தேவதாஸ்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வாமிகா கபி ‘சந்திரா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். குறிப்பாக, ஆக்ஷன் காட்சிகளுக்கு அனிருத்தின் பின்னணி இசை கூடுதல் பலமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

பாக்ஸ் ஆபிஸில் வேகம்!
வெளியான மூன்று நாட்களிலேயே ‘டிசி’ திரைப்படம் உலகளவில் ரூ.18 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் படத்திற்கு வரவேற்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. இயக்குநராக பல வெற்றிகளை பதிவு செய்த லோகேஷ், ஹீரோவாகவும் தனது முதல் படத்திலேயே பாக்ஸ் ஆபிஸில் வேட்டையை தொடங்கியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved