Also Watch
Read this
By: Fyrose Banu

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம், கட்டா குஸ்தி, கட்டா குஸ்தி 2 ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் செல்லா அய்யாவு, அடுத்ததாக கென் கருணாஸ் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில், கட்டா குஸ்தி 3 குறித்து பேசிய அவர், முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பே இரண்டாம் பாகம் உருவாக காரணமாக இருந்ததாக தெரிவித்தார். மேலும், வெறும் வெற்றியை பயன்படுத்தி அடுத்தடுத்த பாகங்களை உருவாக்கக் கூடாது என்றும், கதையிலும் முந்தைய பாகங்களுடன் தொடர்பு இருக்க வேண்டும் என்பதில் தான் கவனமாக இருந்ததாக கூறினார்.

விஷ்ணு விஷாலிடம் இரண்டாம் பாகம் குறித்து பேசியபோது, “பெயருக்காக மட்டும் பார்ட் 2 எடுக்க வேண்டாம். நல்ல கதை இருந்தால் மட்டுமே செய்யலாம்” என்று அவர் கூறியதாகவும், அதன்பிறகு சுமார் 6 மாதங்கள் கதை எழுதி, இருவருக்கும் பிடித்த பிறகே கட்டா குஸ்தி 2 உருவானதாகவும் செல்லா அய்யாவு தெரிவித்தார்.

முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சி தெரிவித்த அவர், “நல்ல கதை அமைந்தால் ‘கட்டா குஸ்தி 3’ உருவாகவும் வாய்ப்பு இருக்கிறது” என்று கூறினார். அடுத்து கென் கருணாஸ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாகவும், அந்தப் படத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகும் என்றும் அவர் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved