news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news விவாகரத்தான பெண்கள் தான் டார்கெட், தனிமையில் இருந்த வீடியோ, மிரட்டிய ஆடியோ
tv

Also Watch

விவாகரத்தான பெண்கள் தான் டார்கெட், தனிமையில் இருந்த வீடியோ, மிரட்டிய ஆடியோ

இளைஞர் கைதாவது எப்போது?

32

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருமண இணையதளங்களில் விவாகரத்தான பெண்களைக் குறிவைத்து ஏமாற்றி, அவர்களது வாழ்க்கையை சீரழித்ததாக, சென்னை அயனாவரத்தை சேர்ந்த இளைஞர் மீது புகார் எழுந்துள்ளது. வழுக்கை தலைக்கு விக் வைத்து ஏமாற்றிய இளைஞரால் பெங்களூரு இளம்பெண் தற்கொ* செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், குழந்தைக்கு தாய் தேடுவதாக கூறி பெண்களை வலையில் வீழ்த்தியது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

காதல் வலை வீசும்...
மேட்ரிமோனி உள்ளிட்ட வரன் தேடும் தளங்களில் விவாகரத்தான பெண்களை திருமணம் செய்யும் பிரத்யேக பிரிவில் பதிவு செய்து அதன் மூலம் பெண்களுக்கு காதல் வலை வீசியவர் தான் சென்னை அயனாவரத்தை சேர்ந்த கண்ணன் தன்ராஜ்.

10க்கும் மேற்பட்ட பெண்கள்
ஏற்கெனவே திருமண வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் தனக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும், அந்த குழந்தைக்கு தாய் இல்லாததால் தாய் தேவைப்படுவாக கூறி நெருக்கமாக பழகி 10க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றியதாக எழுந்த புகாரை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த விவகாரத்தில் கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.

புகைப்பட ஆதாரங்களுடன்...
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயதார்த்தம் செய்து ஏமாற்றியதோடு, நகை மற்றும் பணத்தை பெற்று கொண்டு மோசடி செய்ததாக புகைப்பட ஆதரங்களுடன் முறையிட்டார்.

மிரட்டல்... குற்றச்சாட்டு
கண்ணன் தன்ராஜ் பல பெண்களை ஏமாற்றி அவர்களுடன் நெருக்கமாக இருந்த போது எடுத்த வீடியோ உள்ளிட்டவற்றை வைத்து கொண்டு அவர்களை மிரட்டி வருவதாக குற்றம்சாட்டிய பாதிக்கப்பட்ட பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண்களையும் அச்சுறுத்தி வருவதாக குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

உயிரை மாய்த்த இளம்பெண்
இதனிடையே, கண்ணன் தன்ராஜ் பெங்களூருவை சேர்ந்த ரேணுகா என்பவருடன் லிவிங் டுகெதரில் இருந்து வந்த போது கர்ப்பமடைந்து ஒரு குழந்தை பிறந்த நிலையில், அதனை வைத்து வரதட்சனை கொடுமை செய்ததாக குற்றம்சாட்டிய இளம்பெண்ணின் பெற்றோர், இதனால் மன உளைச்சலில் தான் மகள் தற்கொ* செய்து கொண்டதாக கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

தண்டனை வழங்க கோரிக்கை
மகளை தான் இழந்துவிட்டோம் பேரக்குழந்தையாவது எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த ரேணுகாவின் தாய் ராஜேஷ்வரி, கண்ணன் தன்ராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் விட்டு கதறினார்.

10க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய கண்ணன் தன்ராஜ் மீது பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு கடும் தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Link
பயணிகளுக்கு பளார், போதையில் பேஜார், டேஷ்போர்டில் பல்லிபோல் ஒட்டி ஓவர் சேட்டை

பயணிகளுக்கு பளார், போதையில் பேஜார், டேஷ்போர்டில் பல்லிபோல் ஒட்டி ஓவர் சேட்டை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டெல்லியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved