மேல இருக்குறவன் பார்த்துப்பான்" என்பது போல டெல்லி பக்கம் கையைக் காட்டி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தப்பிக்க முயல்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். இதுகுறித்த அவரது எக்ஸ் பதிவில், 100 நாள் வேலைத் திட்டப் பயனாளிகளுக்கு 2 மாதங்களாக சம்பளம் வழங்காததை சுட்டிக் காட்டினால், மத்திய அரசு மீது பழிபோடுவதாக தெரிவித்துள்ளார்.