news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news சந்தீப் மிட்டல் நியமனத்தை திரும்பப்பெற்ற தேர்தல் ஆணையம்
tv

Also Watch

tv

Read this

சந்தீப் மிட்டல் நியமனத்தை திரும்பப்பெற்ற தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையத்தில் புகார் மனு

13

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சந்தீப் மிட்டல் பாஜக ஆதரவாளர் என, தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்திருந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆயுதப்படை டிஜிபியாக மட்டும் சந்தீப் மிட்டல் செயல்படுவார் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. .

தேர்தல் ஆணையம் நடவடிக்கை
தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிட மாற்றத்தை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றது. இதனால் டேவிட்சன் தேவாசீர்வாதம் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்த நிலையில், தேர்தலை நியாயமாக நடத்தும் பொருட்டு, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தை மாற்றியது. அவருக்கு பதில் சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார். அவரும் உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தேர்தல் ஆணையத்தில் புகார் மனு
இந்த நிலையில், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரான சந்தீப் மிட்டல் நியமனத்தை எதிர்த்து, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்ட உத்தரவு திரும்ப பெறபட்டது.

இதனால் சந்தீப் மிட்டல் ஆயுதப்படை டிஜிபியாக செயல்படுவார் எனக் கூறப்படுகிறது. டேவிட்சன் தேவாசீர்வாதம் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக தொடர்வார் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

Related Link
ஜனநாயகன் ரிலீஸ்? என்ன நடந்தது? யார் அந்த கருப்பு ஆடு?

ஜனநாயகன் ரிலீஸ்? என்ன நடந்தது? யார் அந்த கருப்பு ஆடு?

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 31052026

0
16 mins agoshare
இன்றைய ராசி பலன்கள்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved