Also Watch
Read this
By: Manigandan Raja

சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்தது. 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 14 ஆயிரத்து 920 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 1 லட்சத்து 19 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வாரத்தில்...
கடந்த வாரத்தில், தங்கம், வெள்ளியின் விலை சற்று குறைந்து மக்களுக்கு ஆறுதல் அளித்தது. தற்போது வாரத்தின் தொடக்கத்திலேயே அவற்றின் விலை மீண்டும் உயரத் தொடங்கியிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிப்.23 வாரத்தில் முதல் நாளில்...
வாரத்தின் முதல் நாளான பிப்ரவரி 23ஆம் தேதி, தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்தது. சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.180 உயர்ந்து, ரூ.14,860க்கு விற்பனை ஆனது. ஒரு சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து ரூ.1,18,880க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை, ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.300க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ.3,00,000க்கு விற்பனை ஆனது.

பிப்.24 தங்கம், வெள்ளி விலை
தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 19 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 14 ஆயிரத்து 890 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை தொடர்ந்து உயர்வதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் விலை உயர்ந்த நிலையில் வெள்ளியின் விலையில் சரிவு ஏற்பட்டது. ஒரு கிலோ வெள்ளி 10 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

பிப்.25 தங்கத்தில் விலை நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 19,440 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்த ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு கிராம் 14,930 ரூபாயாக இருந்தது. சென்னையில் வெள்ளி விலையில் கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 295 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோவுக்கு 5,000 ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 95,000 ரூபாயாக இருந்தது.

பிப்.26 விலை நிலவரம்
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 14 ஆயிரத்து 920 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 1 லட்சத்து 19 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை குறைந்தாலும் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 295 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்...
20.02.2026 - ரூ.1,15,360
21.02.2026 - ரூ.1,17,440
23.02.2026 - ரூ.1,18,880
24.02.2026 - ரூ.1,19,120
25.02.2026 - ரூ.1,19,440
26.02.2025 - ரூ.1,19,360
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved