news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அரசுக்கு அவகாசம் வேண்டும், வேளாண் அமைச்சர் பதிலுரை
tv

Also Watch

அரசுக்கு அவகாசம் வேண்டும், வேளாண் அமைச்சர் பதிலுரை

தமிழக சட்டப்பேரவையில் உரை

3

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு பதில் அளித்த அமைச்சர் வினோத், வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசுக்கு போதிய கால அவகாசம் அளிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில்...
இதுதொடர்பாக, அமைச்சர் வினோத் பேசி இருப்பதாவது;
அனைவரும் இங்கு மூத்த தலைவர்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற போதிய கால அவகாசம் தேவை என்பதை அறிவீர்கள். விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் ஏற்கெனவே உள்ள திட்டங்களுடன் புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படும். இதுவரை ஆய்வு செய்ததில் 23,399 ஹெக்டேர் பரப்பளவில் 33% மேல் பாதிக்கப்பட்ட பயிர்கள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளது.

ஊக்கத்தொகை உயர்வு
கணக்கெடுப்பு முடிந்த பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து நிவாரணம் தர நடவடிக்கை எடுக்கப்படும். பொதுரக, சன்னரக நெல், கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகைகளை முதல்வர் விஜய் உயர்த்தி உள்ளார். பருத்தி மறுமலர்ச்சி இயக்கம், வெற்றி வான்மகள் எனும் டிரோன் பயிற்சி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

வினோத் vs ஓபிஎஸ்
இவர்களுக்கு என்ன ஆட்சி செய்ய தெரியும்? என கேட்டனர், லஞ்சம் இல்லாத ஆட்சியை முதலமைச்சர் விஜய் தந்துள்ளார். வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசுக்கு போதிய கால அவகாசத்தை எதிர்க்கட்சியினர் வழங்க வேண்டும்.

சூரியனால் அனைவருக்கும் வியர்க்கும் நிலையில் சூரியனுக்கே வியர்க்க வைத்தார் முதல்வர் விஜய். இது வெற்று பட்ஜெட் அல்ல. தமிழ்நாடு விவசாயிகள் போற்றும் வெற்றி பட்ஜெட். அனைவருக்கும் சூரியனால் வியர்த்தது, முதல்வர் விஜய் வந்தபிறகு சூரியனுக்கே வியர்த்தது.

இவ்வாறு வேளாண் அமைச்சர் வினோத் உரையாற்றினார்.
அப்போது குறுக்கிட்ட திமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம், ‘இதுவரை யாருமே நெருங்க முடியாத நிலையில்தான் சூரியன் இருக்கிறார் என்பதையும், எத்தனையோ விஞ்ஞானிகள் முயற்சி செய்த பிறகும் அங்கே ஏவுகணைகளை ஏவ முடியவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்,’ என்றார்.

Related Link
சட்டசபையில் தனித்தீர்மானம், ஆதரவும் எதிர்ப்பும்

சட்டசபையில் தனித்தீர்மானம், ஆதரவும் எதிர்ப்பும்

            


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருமண மோதிரம் அணிந்த புகைப்படத்தை பகிர்ந்த ரொனால்டோ

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved