கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலம் கருதி கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மற்றும் கடலூர் மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது