news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news நேபாளத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது எப்படி?
tv

Also Watch

நேபாளத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது எப்படி?

டிராவல்ஸ் உரிமையாளர் தகவல்

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழர்கள் 57 பேரை ஆன்மீக சுற்றுலாவுக்கு அழைத்து சென்ற கும்பகோணம் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர், நேபாளத்தில் மிகப்பெரிய வெடிப்பும், அதனை தொடர்ந்து தூசி மண்டலமும் ஏற்பட்டதாக தகவல் கூறி உள்ளார்.

சூப்பர் யாத்ரா டிராவல்ஸ்...
தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த 57 பேர், கும்பகோணத்தில் இருந்து கடந்த 23ஆம் தேதி இரவு கைலாஷ் யாத்திரை புறப்பட்டனர். இவர்களை கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது. இந்த பயணிகள், இன்று ஆகஸ்ட் 26ஆம் தேதி, திபெத் நாட்டின் காத்மாண்டு பகுதியில் 3 வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். இவர்களை நேபாளத்தை சேர்ந்த சாம்ராட் டூரிஸம் அண்ட் டிராவல்ஸ் என்ற சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் அனுப்பி வைத்தனர்.

திடீர் அசுர வெள்ளப்பெருக்கு
இந்த நிலையில், அவர்கள் சென்று கொண்டிருந்த பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுகுறித்து, கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் உரிமையாளர் சாதிக் கூறியதாவது;

கடந்த 23ஆம் தேதி கும்பகோணத்தில் இருந்து கிளம்பியவர்கள் தற்போது திபெத் நாட்டில் சிக்கி உள்ளனர். இன்று காலை அவர்கள் சென்ற 2 வாகனங்களும் சிக்கின. காலை 10 மணிக்கு எனக்கு கிடைத்த தகவலின்படி, 20 பேர் பாதுகாப்பாக உள்ளனர். மீதமுள்ள 37 பேர் தங்களது உடமைகளை இழந்து ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கிருந்து சிவரஞ்சனி என்பவர் எனக்கு இந்த தகவலை தந்தார்.

தொடர்பு கொள்ள முடியவில்லை
எவ்வித தொலை தொடர்பு வசதியும் இல்லாத ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்பதால், அவர்களை அடிக்கடி தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்களாக நம்மை தொடர்பு கொண்டால் மட்டுமே பேசமுடியும். இந்தக் குழுவில் 30 வயதான எனது மகன் உமர் பாரூக், வழிகாட்டியாக சென்று உள்ளார். ஏற்கெனவே இரண்டு முறை நேபாளத்துக்குச் சென்று வந்திருக்கிறார். மற்றவர்களை போலவே எனக்கும், எனது மகன் குறித்த எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்...
இதுவரை நான் அனுப்பி வைத்த யாத்ரீகர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதில்லை. எனவே, தற்போதும் அனைவரும் பாதுகாப்பாக மீட்டு வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.
இவ்வாறு சாதிக் தெரிவித்தார்.

Related Link
நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள், அதிர்ச்சி தகவல்

நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள், அதிர்ச்சி தகவல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் கடும் பாதிப்பு

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved