ஐசிசியின் 2024ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதினை வென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தெரிவித்துள்ளார். இளம் வயதிலிருந்து தனது ஹீரோக்கள் இந்த மிகப் பெரிய ஐசிசி விருதினை வென்றதைப் பார்த்திருப்பதாக தெரிவித்த பும்ரா, தற்போது அவர்களுடன் தானும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.