news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news நேபாள பிரதமருக்கு இந்தியப் பிரதமர் மோடி ஆறுதல்
tv

Also Watch

நேபாள பிரதமருக்கு இந்தியப் பிரதமர் மோடி ஆறுதல்

இந்திய அரசு துணை நிற்கும்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PM Modi-1

இடர்பாடு மிகுந்த நேரத்தில் இந்திய அரசு துணை நிற்கும்

நேபாளத்தின் இடர்பாடு மிகுந்த நேரத்தில் இந்திய அரசு எப்போதும் துணை நிற்கும் என அந்நாட்டு பிரதமருக்கு இந்திய பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து நேபாள பிரதமர் பலேந்திர ஷாவிடம் தொலைபேசியில் பேசியதாகவும், இக்கடினமாக நேரத்தில் இந்திய மக்கள் உறுதுணையாக நிற்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், மனிதாபிமான உதவிகளை செய்யவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் இந்தியக் குழு தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நன்றி

நேபாளத்திற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்ததற்கும், ஆதரவு மற்றும் ஆறுதல் தெரிவித்ததற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த எக்ஸ் பதிவில், இந்த கடினமான நேரத்தில் நேபாளத்திற்கு தெரிவித்த ஆதரவு வார்த்தைகளையும், தாராளமான உதவிக்கான முன்மொழிவையும் பெரிதும் மதிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஆதரவு மனப்பான்மையானது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் வெளிப்பாடு எனவும், இதனை தாங்கள் மிகவும் உயர்வாக கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நேபாளத்துக்கு மருந்து உட்பட 10 டன் நிவாரண பொருட்கள்

இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு 10 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த இக்கட்டான சூழலில் நேபாளத்துடன் இந்தியா துணை நிற்பதாக குறிப்பிட்டுள்ளார்.

நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் நேற்று காலை கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 750-க்கும் மேற்பட்டோர் அடித்துச் செல்லப்பட்டனர். இதில், 157 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், 95 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெவித்துள்ளது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட 10 டன் பொருள்கள் இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Link
தனியார் துறைக்கு தாரை வார்க்கப்படும் ஏவுகணை தொழில்நுட்பங்கள்

தனியார் துறைக்கு தாரை வார்க்கப்படும் ஏவுகணை தொழில்நுட்பங்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இது சட்டசபையா, சண்டை சபையா? பிரேமலதா கேள்வி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved