Also Watch
Read this
By: Fyrose Banu

நாடாளுமன்றத்தில் கமல் பேசியது புரியாமலயே அவரை சிலர் பாராட்டுகிறார்கள். அவர் பெரியாருக்கான பதிலைதான் கூறுகிறார் மேலும் தெலுங்கு மொழியை கேவலமாக பேசி உள்ளார் என பாஜக பிரமுகர் கஸ்தூரி விமர்சித்துள்ளார்.

பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது
தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலையை கண்டித்து கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட கஸ்தூரி திமுக ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு முற்றிலும் சீர் குலைந்துள்ளதாகவும், குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளதாகவும் கஸ்தூரி குற்றம்சாட்டினார்.

விஜயை காட்டமாக விமர்சித்த கஸ்தூரி
ஆதவ் அர்ஜூனா பேசும் அளவிற்கு கூட தவெக தலைவர் விஜய் பேசுவதில்லை என தெரிவித்த கஸ்தூரி, புதிய கட்சி என்பதால் விருப்ப மனுக்களை ரசிகர்கள் வாங்குவார்கள் என்றும், ஆனால் அவை மனுத்தாக்கல் செய்யப்படுவதுமில்லை, தாக்கல் செய்பவர்கள் போட்டியிடுவதுமில்லை, போட்டியிடுபவர்கள் வெற்றி பெறுவதுமில்லை என காட்டமாக விமர்சித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved