news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தலைமை காவலர் ஒருவருக்கு கத்திக்குத்து
tv

Also Watch

tv

Read this

தலைமை காவலர் ஒருவருக்கு கத்திக்குத்து

மயிலாடுதுறை

15

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
myd

தலைமை காவலருக்கு கத்திக்குத்து

பூம்புகார் சட்டமன்ற தொகுதி ஜமாலியா நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி 324 வது பூத்தில் தலைமை காவலர் ஒருவருக்கு கத்திக்குத்து. கத்தியால் குத்திய நபரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் காலை ஏழு மணிக்கு துவங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11மணி வரை 36. 65 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்நிலையில் தொகுதிக்கு உட்பட்ட பொறையார் ஜமாலியா நடுநிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த குத்தாலம் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் விக்னேஷ் என்பவரை ஒருவர் திடீரென்று தன் கையில் எடுத்து வந்திருந்த சிறிய கத்தியால் சார மாறியாக கழுத்து இரண்டு கைகளில் குத்தி கிழித்துள்ளார்.

தலைமை காவலர் படுகாயம் அடைந்த நிலையில் உடனடியாக பொறையார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கே தலைமை காவலருக்கு 15 தையலுக்கு மேல் போடப்பட்டு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. தலைமை காவலரை தாக்கிய நபர் காட்டுச்சேரியைச் சேர்ந்த பிரபாகரன் என்பதும் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான பிரபாகரன் காவல்துறையினர் மீது வெறுப்பில் இருப்பவர் என்றும் சீருடையில் கண்டால் அவருக்கு பிடிக்காது என்றும் இதேபோல் கடந்த சில வருடங்களுக்கு முன்பு போலீசார் ஒருவரை தாக்கி உள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து பொறையார் போலீசார் பிரபாகரனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். வாக்குச்சாவடி மையத்திலேயே தலைமை காவலர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் வாக்காளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
செல்போனில் உள்ள ஐடி கார்டை காட்டி வாக்குப்பதிவு

செல்போனில் உள்ள ஐடி கார்டை காட்டி வாக்குப்பதிவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்

2
26 mins agoshare
ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved