news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news "நபிகள் வழியில் அன்பை தழைக்கச் செய்வோம்"
tv

Also Watch

"நபிகள் வழியில் அன்பை தழைக்கச் செய்வோம்"

மிலாதுநபி வாழ்த்துக்கள்

6

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மிலாதுநபி வாழ்த்துக்கள்

இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான மிலாது நபி பெருவிழாவை முன்னிட்டு, உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய மக்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.

முதல்வர் விஜய் வாழ்த்து
இதுகுறித்து, முதல்வர் விஜய் கூறி இருப்பதாவது;
இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த இந்நன்னாளில் என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய மிலாது நபி நல்வாழ்த்துக்கள். மனிதகுலத்தின் மீது அன்பையும், ஏழை எளியோரின் மீது இரக்கத்தையும், அனைவரிடத்திலும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பேண வேண்டும் என இறைத்தூதர் நபிகள் நாயகம் போதித்த உயரிய நெறிகளைப் பின்பற்றி, உலகில் அன்பையும் நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்வோம். இந்த நன்னாளில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நலமும், வளமும் நிறைந்திடட்டும்
இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.

"இரக்கச் சிந்தனையை வலியுறுத்திய பெருமகனார்"
இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான மீலாதுன் நபியைக் கொண்டாடிடும் இசுலாமியச் சகோதரர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றவர்களின் மனதை புண்படுத்தாதீர்கள் என அன்பையும், கல்வி கற்பது ஆண் பெண் இருவரின் கடமை என அறிவையும், ஒருவனுடைய உழைப்புக்கு அவனுடைய உழைப்பின் வியர்வை
உலருவதற்குள் ஊதியத்தைக் கொடுத்து விடு எனத் தொழிலாளர்களின் உரிமையையும், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் எனப் பொய்யாமையையும், வறியவருக்கு உதவிடும் இரக்கச் சிந்தனையையும் வலியுறுத்திய பெருமகனார் அண்ணல் முகமது நபி.

எவராலும் அசைத்துப் பார்க்க முடியாத பாச உறவாக தி.மு.க.வுக்கும் இசுலாமியர்களுக்குமான உறவு தொடர்கிறது. இப்படிப்பட்ட நீண்ட நெடிய நட்பின் உணர்வோடும் உரிமையோடும் நபிகள் நாயகம் காட்டிய அன்பு வழியில் பயணித்திடும் என் நெஞ்சுக்கினிய இசுலாமியப் பெருமக்கள்
அனைவருக்கும் எனது மீலாதுன் நபி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Link
ஓணம் திருநாள் - முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

ஓணம் திருநாள் - முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

6 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம், விவாதம்

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved