news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news திருச்சி சோழாவை வீழ்த்தியது மதுரை பேந்தர்ஸ்
tv

Also Watch

திருச்சி சோழாவை வீழ்த்தியது மதுரை பேந்தர்ஸ்

பேட்டர்கள் அசத்தலாக விளையாடினர்.

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNPL

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 2-வது போட்டி

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 2-வது போட்டியில் திருச்சி சோழா அணியை வீழ்த்தி மதுரை பேந்தர்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த திருச்சி சோழா அணி 20 ஓவர்களில் 173 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து விளையாடிய மதுரை பேந்தர்ஸ் அணி ஒரு கட்டத்தில் 14.5 ஓவர்களில் 114 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. எனினும், கடைநிலை பேட்டர்கள் அசத்தலாக விளையாடினர். கடைசி 3 ஓவர்களுக்கு 42 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிஎஸ்கே அணியில் பந்துவீச்சாளராக அசத்திய குர்ஜப்னீத் சிங், 9 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக பாகிஸ்தான் வீரர் சாதனை

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 49 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் வீரர் 150 ரன்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்துள்ளார். இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் வீரர் அப்துல்லா ஷாஃபிக் ஆட்டமிழக்காமல் 160 ரன்கள் குவித்தார்.

இதன் மூலம், 49 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகளில் டெஸ்ட் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு மேல் அடித்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்தார். 1977-ல் மஜீத் கான் கயானாவில் 167 ரன்கள் குவித்திருந்தார். 1958-ல் ஹனீப் மொஹம்மது 337 ரன்கள் குவித்ததே இதுவரை அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகும்.

கனடா ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று

கனடா ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸ் நாட்டின் அரினா சபலென்கா வெற்றிபெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். டொரண்டோ நகரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜப்பானின் மொயூகா உஜ்ஜிமாவை எதிர்கொண்ட சபலென்கா 6-க்கு 3, 6-க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்ற போட்டிகளில் செக் குடியரசை சேர்ந்த நிகோலா பர்டுன்கோவா, ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா, அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, அமெரிக்காவின் மேடிசன் கீஸ், உக்ரைனின் மர்டா கோஸ்ட்யூக் உள்ளிட்டோரும் முதல் சுற்றில் வெற்றிபெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

Related Link
TNPL கிரிக்கெட் தொடர்: திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி

TNPL கிரிக்கெட் தொடர்: திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கைத்தறி தினத்தை முன்னிட்டு பிரதமர் வீடியோ வெளியீடு

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved