news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews TNPL கிரிக்கெட் தொடர்: திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி
tv

Also Watch

TNPL கிரிக்கெட் தொடர்: திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி

திண்டுக்கல்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திண்டுக்கல் டிராகன்ஸ்

திருப்பூர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூரை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்.

கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி, 15.4 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து களமிறங்கிய திண்டுக்கல் டிரகன்ஸ் 9 பந்துகள் மீதமிருந்த நிலையில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் குவித்து வெற்றிபெற்றது.

இலங்கைக்கு சென்றடைந்த இந்திய டெஸ்ட் அணி 

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக கேப்டன் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி கொழும்பு சென்றடைந்தது. இரு அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ள சூழலில், முதல் போட்டி வரும் 15-ம் தேதி தொடங்கவுள்ளது.

கடைசியாக இந்திய அணி இலங்கையில் 2017-ம் ஆண்டு டெஸ்ட் தொடரில் விளையாடிய நிலையில், 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. எனினும், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி உள்ளது. இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி தனது எக்ஸ் பக்கத்தில், இந்திய அணி வந்தடைந்ததாக தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் புஜாரா புகழாரம் 

தாக்குதல் பாணியில் செயல்பட்டு வருவதால்தான் டெஸ்ட் அரங்கின் தவிர்க்கமுடியாத பவுலராக ஜடேஜா திகழ்வதாக புஜாரா பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், டெஸ்ட் அரங்கில் தொடக்கத்தில் ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற மனநிலையுடன் ஜடேஜா பந்து வீசுவதாகவும், ஆடுகளம் சற்று கைகொடுத்தால் மட்டும் விக்கெட்டுகள் வீழ்த்த முயற்சிப்பார் எனவும் தெரிவித்தார்.

சூழ்நிலையை புரிந்து கொண்டு ஒவ்வொரு போட்டியிலும் சரியான லென்த்தில் பந்து வீசி, ஒவ்வொரு பந்திலும் விக்கெட்களை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

Related Link
இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா இறுதிச்சுற்றுக்கு தகுதி

இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா இறுதிச்சுற்றுக்கு தகுதி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved